கோவை கலெக்டர் அலுவலகம் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2021
08:59

கோவை : வேளாண் பல்கலையுடன் பேச்சு நடத்தி தங்கள் பிரச்னைக்கு தீர்வு வழங்க கோரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அரியர் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் தோல்வி அடைந்ததாக பல்கலை சார்பில், அறிவிக்கப்பட்டது.மேலும், மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுதிய போது பல்வேறு முறைகேடு செய்ததால் தேர்வில் தோல்வி அடைந்ததாக பல்கலை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதைகண்டித்து, மாணவர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த மாணவர்கள் வேளாண் பல்கலை., நிர்வாகத்துடன் பேச்சு நடத்தி தங்களுக்கு தீர்வு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷம் எழுப்பினர். இதன் பின், கலெக்டர் சமீரனை சந்தித்து மனு வழங்கினர்.

மாணவர்கள் கூறியதாவது:
பல்கலை., யின் தேர்வு முடிவில் எழுத்துதேர்வில், 51 மதிப்பெண் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மொத்த மதிப்பெண், 45 எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் பெயர் உள்ள இடத்தில் ஒரு வங்கியின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதற்கும், 65 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டால், எச்சரிக்கை ஒலி வரும் என தெரிவிக்கப்பட்டது.

நாங்கள் தேர்வு எழுதும் போது எந்த எச்சரிக்கை ஒலியும் வரவில்லை. மாணவர்கள் முறைகேடு செய்ததற்கான ஆதாரம் வழங்கப்படவில்லை. மறுதேர்வில் பங்கேற்றால் ஒரே நாளில், நான்கு தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறது. இது முடியாத காரியம். எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணத்தான் போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு, மாணவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X