'லொட லொட'; பராமரிப்பின்றி தீயணைப்பு வாகனங்கள் : சொந்த செலவில் சீர் செய்யும் பரிதாபம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

07 டிச
2021
09:05
பதிவு செய்த நாள்
டிச 07,2021 09:04

மதுரை: மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான தீயணைப்பு வாகனங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளன. அவசரமாக செல்லும் போது நடுவழியில் நிற்ககூடாது என்பதற்காக அந்தந்த நிலைய அதிகாரிகள் சொந்த செலவில் சீர் செய்து வருகின்றனர்.



மதுரை மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்கள், 25 வாகனங்கள் உள்ளன. அனைத்தும் 10 முதல் 15 ஆண்டுகள் 'வயது' உடையவை. ஒரு வாகனத்திற்கு அதிகபட்ச ஆயுள் 15 ஆண்டுகள் என்றாலும் அதையும் தாண்டி தீயணைப்பு வண்டிகள் 'தீ'யாக வேலை செய்கின்றன. அதேநேரம் உதிரிபாகங்கள் பல கழன்றும், துருப்பிடித்தும் உள்ளன. இதனால் அவ்வப்போது 'டிங்கிரிங்' வேலை செய்து சமாளிக்கின்றனர்.



தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது: போலீஸ் துறைக்கு முக்கியத்துவம் தரும் அரசு, தீயணைப்பு துறையை கண்டுகொள்வதில்லை. காலத்திற்கேற்ப நவீன வாகனங்கள் தந்தால்தான் சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்ல முடியும். மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் அதிநவீன வசதிகள் கொண்டவை. மத்திய அரசு பெல்ஜியம், பின்லாந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தந்துள்ளது.



தமிழக அரசும் அதேபோல் இறக்குமதி செய்து வழங்கினால் தீ விபத்தின் பாதிப்பை குறைக்கலாம். உயிரிழப்பை தடுக்கலாம். பராமரிப்பு செலவும் குறைவு.குறுகிய சந்துகளில் தீப்பிடித்தால் டூவீலரில் சென்று அணைக்கும் திட்டம் ஐ.பி.எஸ்., அதிகாரி நட்ராஜ் இயக்குனராக இருந்த போது மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த டூவீலர்கள் உதிரிபாகங்களின்றி, ஆள் பற்றாக்குறையால் பயனின்றியுள்ளன என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-202119:58:52 IST Report Abuse
Bhaskaran எல்லாம் காயலான் கடயில் போடுவதற்கு மட்டுமே தகுதி உள்ளவை போலும்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-டிச-202112:02:05 IST Report Abuse
Kasimani Baskaran இலவசம் முக்கியமா அல்லது தீயணைப்பது முக்கியமா? இன்னும் நவீனமாகக் கேட்டால் கிரிக்கெட் வீரர்களை பாராட்டுவது முக்கியமா அல்லது வெள்ள நீரை வெளியேற்றுவது முக்கியமா?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
07-டிச-202111:44:41 IST Report Abuse
Ramesh Sargam தக்க நேரத்தில் சென்று உயிர் காக்க உதவும் தீ அணைப்பு வாகனங்களுக்கு செலவு செய்ய மனமில்லையாம் இந்த திருட்டு முன்னேற்ற கழக அரசுக்கு. ஆனால், ரூ. 39 கோடியில் நினைவிடமாம். அடுக்குமா இது?? இந்த அவல நிலைக்கு இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் காரணம். நான் எப்பொழுதும் கூறுவதுபோல் இந்த இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X