கோவை : கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் முதுநிலை முதன்மை விஞ்ஞானி கண்ணன் வாரியர் கூறியதாவது :
சவுக்கு மரத்தின் தேவை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு நிறுவனத்தில் கலப்பு ரக விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன், மூலம், அதிக மகசூல் கிடைத்துள்ளது.இதற்கு முன், 100 டன் வரை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.தற்போது புதிய ரக கலப்பு விதைகள் மூலம்,தமிழகத்தில் 175 - 200 டன் வரை சவுக்கு உற்பத்தி நடக்கிறது. புதிய ரக விதைகள் மூலம் விவசாயிகளுக்கு, இரண்டரை ஆண்டுகளில் முழு விளைச்சல் கிடைத்து விடும்.
இவ்வாறு, அவர் கூறினார்.