ஈரோடு: பாலியல் தொந்தரவு குறித்து, மாணவியர் புகார் தெரிவிக்க வசதியாக, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டி வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது: பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியின் சாவி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம், சட்ட பணிகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அவர்கள் பெட்டியில் ஆய்வு செய்வர். மனுக்கள் இருப்பின் உரிய விசாரணை, நடவடிக்கை மேற்கொள்வர். உடனடி புகார் அளிக்க, ஏற்கனவே குழந்தைகள் உதவி எண், 1098, கல்வி உதவி வழிகாட்டி மைய எண், 14417, குழந்தைகள் நல குழும எண், 72006-22077 உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.