கோவை : விவசாயிகளுக்கு, வேளாண் உபகரணக்கடன்கள் வழங்க, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததற்கு, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்., மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறியதாவது:
ஸ்டேட் வங்கி விவசாயிகளுக்கு டிராக்டர் மற்றும் வேளாண் உபகரணக் கடன்கள் வழங்குவதற்கு, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சில பணக்காரர்களுக்கு சாதகமாக மட்டுமே, பா.ஜ., அரசு செயல்படுகிறது. ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏன், தனியாருக்கு வழங்க வேண்டும். இது கண்டனத்துக்குரியது. நாகாலாந்தில் அப்பாவி மக்களை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. உயர்மட்ட விசாரணை என்ற பெயரில், மத்திய பா.ஜ., அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.
இவ்வாறு, அவர் கூறினார்.