சத்தியமங்கலம்: அந்தியூர் அருகேயுள்ள பட்லூரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி, 57; ஆசனூர் பழங்குடியினர் அரசு மேல்நிலை பள்ளியில், 12 ஆண்டுகளாக சமையலராக வேலை பார்த்தார்; அங்கேயே வசித்தார். உயர் ரத்த அழுத்த பாதிப்பு நோய் இருந்து. நேற்று காலை அறையில் மயங்கி கிடந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. ஆசனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.