திருமணம், சபரிமலை சீசனால் ஆம்னி பஸ்களின் இயக்கம் அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
10:14

சேலம்: ''திருமணம், சபரிமலை சீசனால் ஆம்னி பஸ்களின் இயக்கம் அதிகரித்துள்ளது,'' என, தமிழக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறினார்.


மேலும் அவர் கூறியதாவது: கொரோனா காலத்தில், 500 நாட்களுக்கு மேல் ஆம்னி பஸ்கள் இயக்கப்படாததால், பஸ் ஒன்றுக்கு வட்டி மட்டும், ஐந்து லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். பஸ்கள் நிறுத்தப்பட்டதால், அதனை மீண்டும் இயக்க, மூன்று முதல், ஐந்து லட்சம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் எகிறும் டீசல் விலை உயர்வு, சென்னை உட்பட பல மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் ஆம்னி பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், நவ., மூன்றாவது வாரத்தில், 800 பஸ்களை அதன் உரிமையாளர்கள் இயக்க முடியாமல் நிறுத்தினர். தற்போது சபரிமலை, திருமண சீசன் காரணமாக பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், வார இறுதி நாட்களில், 1,600 ஆம்னி பஸ்களும், பிற நாட்களில், 1,200 பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒமைக்ரான் கொரோனா தமிழகத்தை அச்சுறுத்தி வருகிறது. ஒமைக்ரான் தாக்கம் இல்லாத பட்சத்தில், டிச., கடைசி வாரத்தில், ஆம்னி பஸ்களின் இயக்கம், 2,000 ஆகவும், பொங்கல் பண்டிகையின் போது, 3,000 ஆகவும், அதுவே மார்ச்சில், 4,000 பஸ்களை தாண்டி இயங்க வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகளின் அடுத்த கட்ட நடவடிக்கை, ஒமைக்ரான் பரவல் ஆகியவற்றை பொறுத்து, ஆம்னி பஸ்களின் இயக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X