விவசாயி உடல் எலும்பு கூடாக போலீசார் மீட்பு; தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
10:22

ஆத்தூர்: எட்டு மாதத்துக்கு முன், கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை, எலும்பு கூடாக வசிஷ்ட நதி பாலத்தின் கீழ், போலீசார் மீட்டனர். முக்கிய குற்றவாளியான, தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.


நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே அரியாக்கவுண்டன்பட்டி, மேற்குகாட்டுவளவை சேர்ந்த விவசாயி சுப்ரமணி, 74. கடந்த மார்ச், 23 முதல் சுப்ரமணியை காணவில்லை. விசாரணையில், ஆத்தூர் கல்பகனூரை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெருமாள், கூலிப்படை கும்பலை சேர்ந்த ராமதாஸ் உள்பட ஆறு பேர், சுப்ரமணியை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. கடந்த, 2ல், ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிவகங்காபுரம் சக்திவேல் தோட்டத்தில், 120 அடி தூரத்துக்கு பள்ளம் தோண்டி பார்த்தபோதும், உடல் கிடைக்கவில்லை. சேலத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான பெருமாள், 60, அவரது நண்பர் சக்தி வேல், 45, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் தாசில்தார் மாணிக்கம் முன்னிலையில் நேற்று தடய அறவியல் துறை, போலீசார், வசிஷ்ட நதி பாலத்தின் கீழ் போடப்பட்டிருந்த சுப்ரமணி உடலின் எலும்பு கூடுகளை மீட்டனர். இதில், தலை மற்றும் தண்டுவட எலும்புகள் கிடைக்காததால், தீயணைப்பு துறையினர் மூலம் ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இரண்டு நாள் காவலுக்கு எடுக்கப்பட்டிருந்த, ராமதாஸ், அறிவழகன் ஆகியோரை நேற்று ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சுப்ரமணிக்கு சொந்தமான, 7.11 ஏக்கர் நிலத்தை, 1.26 கோடி ரூபாய்க்கு, தி.மு.க., நிர்வாகி பெருமாள் விலை பேசியுள்ளார். 10 லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்து ஒப்பந்த பத்திரம் எழுதியுள்ளனர். அதன்பின், மீதம் பணம் கொடுக்காமலும், வாரிசு இல்லாத சொத்து என்பதால் பெருமாள், அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர் சுப்ரமணியை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்காக, கூலிப்படையை சேர்ந்த ராமதாஸ், அறிவழகன், தினேஷ், முஸ்தபா ஆகியோரை அழைத்து வந்து, கடந்த மார்ச் மாதம் சுப்ரமணியை கழுத்தை நெரித்து கொலை செய்து, சக்திவேல் தோட்டத்தில் புதைத்துள்ளனர். போலீசார் விசாரணைக்கு பின், தோட்டத்தில் இருந்த உடலை தோண்டி எடுத்து சாக்கு மூட்டையில் கட்டி வந்து, 10 கி.மீ., தூரம் உள்ள வசிஷ்ட நதி பாலத்தின் கீழ் தண்ணீரில் போட்டு தலைமறைவாகியுள்ளனர். சாக்கு மூட்டையில் இருத்த ரத்த கசிவுகள், பாலத்தின் தடுப்புச்சுவரில் உள்ளது. சுப்ரமணி உடலின் எலும்பு கூடுகள் பறிமுதல் செய்து, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். முக்கிய குற்றவாளிகள் பெருமாள், சக்திவேல் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X