ஈரோடு: சிவன் கோவில் நிலத்தை மீட்கக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் சசிதயாள் தலைமையில், நேற்று மனு வழங்கினர்.
மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சீனாபுரத்தில், பழமையான கைலாயநாதர் கோவில் உள்ளது. ஆரம்ப காலத்தில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டது. பராமரிப்பு இல்லாததால் கோவில் பாழடைந்தது. இதனால் அறநிலையத்துறை கோவில் பராமரிப்பு, கோவில் நிலங்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கையை கைவிட்டது. தற்போது கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, சிலர் வீடு கட்டியுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கோவில் நிலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றி, கோவிலை பராமரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.