முழுமை பெறாத ரோடு விரிவாக்கப்பணி விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டுனர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
22:15

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பல்லடம் ரோடு விரிவாக்கப்பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.


பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரோடுகள் விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. நகரில், தேர்நிலையம், காந்தி சிலை, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில், ரவுண்டானா அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. அதில், பல்லடம் ரோடு விரிவாக்கத்துக்காக தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.


ரோட்டோரம் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு, அதன் மேற்பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ரோட்டில் பணிகள் பாதியிலேயே நிற்பதால் விபத்துகள் ஏற்படுகிறது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பல்லடம் ரோட்டில் விரிவாக்கப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. அதில், மழைநீர் வடிகால் கட்டப்பட்டு அதன் மேல் பகுதி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப ரோடு உயரப்படுத்தாமல் உள்ளதால், வாகனங்களில் வருவோர் நடைபாதையில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.


ஒரு சிலர் அந்த பகுதியை வாகன நிறுத்தப்பகுதியாக மாற்றியுள்ளனர். அதில், மழை நீர் வெளியேறும் வகையில் கட்டமைப்பும் ஏற்படுத்தவில்லை.பல்லடம் ரோட்டின் மற்றொரு பகுதியில், விரிவுப்படுத்தப்பட்ட ரோட்டின் ஓரப்பகுதியை சமப்படுத்தாமல் அப்படியே ஜல்லி கற்களோடு விட்டுச் சென்றனர்.


இதனால், வாகனங்களில் வருவோர், ரோட்டில் இருந்து கீழே இறங்கினால் விபத்துக்கு உள்ளாகின்றனர்.அதிகளவு வாகனம் செல்லும் இந்த ரோட்டில் பணிகள் முழுமையாக முடிக்காமல் உள்ளதால், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.


விபத்து அச்சத்துடன் பயணிக்கும் அவல நிலை நீடிக்கிறது. விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துக்காக விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், பணிகள் அரைகுறையாக நிற்பதால், அதன் நோக்கமே வீணாகும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X