ஒன்னுமே புரியல! பாதாள சாக்கடை இணைப்புக்கு:தினுசு தினுசா கட்டணம் வசூல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
22:24

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தில் சேதமடைந்த பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகள் இன்னும் முழுமையாக புதுப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், வீடுகள் இணைப்பு கொடுக்க ஆர்வம் காட்டுவதுடன், தாறுமாறாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


பொள்ளாச்சி நகராட்சியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 170.22 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமை பெற்றதாக கூறி, வீட்டு இணைப்புகள் கொடுக்கும் பணிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.


இது என்ன கணக்கு




வீட்டுக்கு முன்பும், வீட்டுக்குள்ளும் பாதாள சாக்கடைக்காக சேம்பர் கட்டவும்; இணைப்பு கொடுக்கவும், பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியுடன் இணைக்கும் பணிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.வீட்டில் உள்ள கழிப்பிடம், சமையலறை, கழிப்பிடம் உள்ளிட்டவையில் இருந்து வரும் கழிவுநீரை, குழாய் வாயிலாக முதல் சேம்பரில் இணைப்பது வீட்டு உரிமையாளரது செலவாகும் என நகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.


ஆனால், வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நான்காவது வார்டு பகுதியில், அடிக்கு, 275 ரூபாய் வீதம் கணக்கீட்டு வீட்டுக்கு தகுந்தாற் போன்று வசூலிக்கப்படுகிறது. 15 ஆயிரம் ரூபாயில் துவங்கி, குடியிருப்புக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குமுறுகின்றனர்.


வீட்டில் இருந்து சேம்பரில் இணைக்க ஒப்பந்ததாரர்கள் அதிகளவு கட்டணம் வசூலிப்பதால், அதை செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். சிறு குழாயாக உள்ளதால், பெரிய குழாய் அமைக்க வேண்டும் என, 600 ரூபாய் வரை கட்டணம் கேட்பதாக கூறப்படுகிறது. இது என்ன கணக்கு என தெரியவில்லை.


மக்களுக்கு மிரட்டல்




இது குறித்து, ஒப்பந்ததாரரிடம் மக்கள் கேள்வி எழுப்பினால், 'நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால், வேலை செய்வோம்; இல்லாவிட்டால், பாதாள சாக்கடை இணைப்பு வழங்க முடியாது,' என்கிறாராம்.ஜோதிநகர் பகுதியில் அதிக கட்டணம் கேட்டு கொடுக்காத வீடுகளில், பணிகளை அரைகுறையாக நிறுத்தி வைத்துள்ளனர். இதுபற்றி புகார் தெரிவித்த வீட்டு உரிமையாளர்களை, ஒப்பந்ததாரர் மிரட்டியதாக கூறப்படுகிறது.


இது குறித்தெல்லாம், நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை; யாரிடம் முறையிடுவது என தெரியாமல் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


குழிகள் பலவீனம்




பொள்ளாச்சி பனிக்கம்பட்டி ரோடு, ரத்தினம் நகர், சத்திரம் வீதி, ராஜாமில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட, ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்துள்ளன. குழிகளில், கான்கிரீட் கம்பிகள் பெயர்ந்து விபத்து குழிகளாக மாறி உள்ளன. பல இடங்களில் ஆள் இறங்கும் குழிகளில் இருந்து ஊற்று போன்று நீர் பொங்கி செல்கிறது.


சேதமடைந்த குழிகள் சீரமைக்காமல், வீடு இணைப்பு வழங்கும் பணியை அவசர, அவசரமாக மேற்கொள்கின்றனர். இதனால், திட்ட குழாயில் கழிவுநீர் முறையாக செல்லுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாதாள சாக்கடையில் இருந்து வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை குறித்து யாரும் கண்டு கொள்வதில்லை.


நகராட்சியில் புகார் தெரிவிக்கலாம்!




நகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'நகராட்சி, ஐந்து மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், 2, 3, 5 என மூன்று மண்டலங்களில், வீட்டு இணைப்பு கொடுக்க குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.அதனால் இணைப்பு கொடுக்கப்படுகிறது. சேதமடைந்த ஆள் இறங்கும் குழிகள் கண்டறிந்து சரி செய்யப்படும்.


வீட்டு இணைப்புக்கு கட்டணம் அதிகம் வசூலிப்பது குறித்து, நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.இதுவரை, புகார் தெரிவித்தவர்கள் விபரம், புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, ஒப்பந்ததாரர் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விகளுக்கு நகராட்சி அதிகாரிகளிடம் பதில் இல்லை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X