ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும், துணை சுகாதார நிலையம்,- நலவாழ்வு மையங்களில் 218 இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும் 122 பல்நோக்கு சுகாதார பணியாளர், (ஆண்கள் மட்டும்)சுகாதார ஆய்வாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிச., 15க்குள் அனுப்பலாம்.
விண்ணப்பத்தை செயற்குழு செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர், சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர், சுகாதாரப் பணிகள் அலுவலகம், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், சிகில் ராஜவீதி, கேணிக்கரை, ராமநாதபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் https://nhm.tn.gov.in மற்றும் https://ramanathapuram.nic.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.