சிறுமலையில் பயன்பாடில்லாத கழிப்பறை | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
சிறுமலையில் பயன்பாடில்லாத கழிப்பறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
00:18

திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலை புதுாரில் பராமரிப்பு இல்லாததால் கழிப்பறைகள் பயன்பாடின்றி புதர் மண்டி கிடக்கிறது.

திண்டுக்கல் சிறுமலை புதுாரில் 2017-18 அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.2 லட்சத்தில் 10 கழிப்பறைகள் கட்டப்பட்டது. சில நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த கழிப்பறையை முறையாக பராமரிக்க ஊராட்சியில் ஆர்வம் காட்டவில்லை.இதனால் கழிப்பறை கட்டடம் பயன்பாடின்றி உள்ளது. கழிப்பறையை சுற்றிலும் புதர் மண்டிக் கிடக்கிறது. சில கழிப்பறை கதவுகளை மர்ம நபர்கள் கழற்றிச் சென்று விட்டனர். இதனால் பொதுமக்கள் இயற்கை உபாதையை திறந்த வெளியில் கழிக்கும் அவல நிலையுள்ளது.

தற்போது தி.மு.க., ஆட்சியிலாவது கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதால் அவர்களுக்கென குடிநீர், கழிப்பறை வசதி எதுவும் இல்லை. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பயன்பெறும் வகையில் சுகாதார வளாகம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X