திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திண்டுக்கல்லில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது.
திண்டுக்கல்லில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, மாநகராட்சியில் 183, ஒட்டன்சத்திரத்தில் 34, பழநியில் 71, கொடைக்கானலில் 38, பேரூராட்சிகளில் 421 என மொத்தம் 747 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.மேலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள், கல்வி அலுவலர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. தேர்தல் அறிவிப்பு எந்நேரம் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 3 ஆயிரத்து 600 பேருக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடக்கிறது.