திண்டுக்கல் : எரியோடு அருகே சவேரியார்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கலைவேந்தன். இவரது மனைவி அமுதா. அதே பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி அமுதாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.2016 செப்.30 ல் இதுதொடர்பாக கலைவேந்தனுக்கும் துரைப்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த துரைப்பாண்டி, கத்தியால் குத்தி கலைவேந்தனை 42, கொலை செய்தார். எரியோடு போலீசார் துரைப்பாண்டியை கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி ஜமுனா, துரைப்பாண்டிக்கு 35, ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.