செய்தி சில வரிகளில்..
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
00:29

ரோட்டோரம் பாய்ந்த பஸ்



கொடைக்கானல்: நேற்று காலை கவுஞ்சியில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த தனியார் பஸ் பைன் மரக் காடு அருகே எதிரே வந்த வாகனத்திற்கு இடம் கொடுக்க முயன்றது. அப்போது ரோட்டோர பள்ளத்தில் இறங்கியது. நல்ல வேளையாக பஸ்சிலிருந்த பயணிகள் காயமின்றி தப்பினர். கொடைக்கானலில் தனியார் பஸ்கள் இதுபோல வேகமாக இயக்குவதால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.



உலக மண்வள தின விழா



நிலக்கோட்டை: வேளாண் துறை சார்பில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது.இணை இயக்குனர் பாண்டித்துரை விவசாயிகளுக்கு மண் வள அட்டையை வழங்கி, அதன் நன்மைகள் குறித்து பேசினார். உதவி இயக்குனர் ராஜேஷ்வரி, வேளாண் அலுவலர் ேஹமலதா, உதவி அலுவலர் பால்ராஜ் பங்கேற்றனர். இதில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம், ஆய்வு முடிவுகளின் படி உயிர் உரங்கள், தொழு உரம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்



விழிப்புணர்வு ஊர்வலம்



திண்டுக்கல்: 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுதப் பெருவிழா கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. மாநகராட்சி சார்பில் நடந்த துாய்மை இந்தியா இயக்கம் 2.0 விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் விசாகன் துவக்கி வைத்தார். கமிஷனர் சிவசுப்பிரமணியன், நகர் நல அலுவலர் இந்திரா பங்கேற்றனர். தலைமை தபால் நிலையத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக திண்டுக்கல் நேருஜி நினைவு பள்ளியில் ஊர்வலம் நிறைவடைந்தது. டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.



நகராட்சி அபராதம்



பழநி: நகராட்சி சார்பில் முகக்கவசம் அணியாமல் பொது இடத்தில் நடமாடியவர்களுக்கு ஊழியர்கள் அபராதம் விதித்தனர்.பழநி மயில் ரவுண்டானா, மார்க்கெட் ரோடு தேவர் சிலை பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்பகுதியில் முகக்கவசம் அணியாமல் பெரும்பாலோனோர் சுற்றித் திரிந்தனர். அவர்களிடம் நகராட்சி ஊழியர்கள் முகக் கவசத்தின் அவசியம் குறித்து அறிவுறுத்தினர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.



மன்றம் துவக்கம்



வடமதுரை: அய்யலூர் ஆர்.வி.எஸ்.,குமரன் கலை அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மை துறை மன்றத் துவக்க விழா நடந்தது. முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். மாணவர் கலைவாணன் வரவேற்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் இயேசு ராஜன் துவக்கி வைத்து பேசினார். மாணவன் சரவணன் நன்றி கூறினார்.



மாணவர் தற்கொலை



கொடைக்கானல்:-நாயுடுபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் கார்த்தி 14. பாம்பார்புரம் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சரிவர செல்லாமல் சுற்றித் திரிந்ததால், பாட்டி விஜயா கண்டித்துள்ளார். தலை வலிப்பதாகவும், தைலம் வேண்டும் என்று கேட்டுள்ளார். யூக்கலிப்டஸ் தைலத்தை குடித்து தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்த மாணவர் பலியானார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.



போக்சோவில் வாலிபர் கைது


ஒட்டன்சத்திரம்: இந்த வட்டாரத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் 26, அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகளான 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசார் ராமராஜை போக்சோவில் கைது செய்தனர்.தற்கொலைபழநி: -பாரதி நகர் பகுதியில் வசிக்கும் சரவணகுமார் 48, இவர் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். உடலை கைப்பற்றி பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X