கோவை:நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான கல்வியாளர்கள் சந்திப்பு நடந்தது.20 கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர். நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் அனிருதன், நேரு கல்வி குழுமத்தின் முதன்மை கல்வி செயலர் கிருஷ்ணகுமார் மற்றும் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர். இதில் கல்லூரியின் செயல்பாடுகள், நவீன வளர்ச்சிக்கான வழி முறைகள் குறித்த ஆலோசனைகள் நடந்தன. கல்லூரி முதல்வர்கள், கல்லூரிகளின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைெயழுத்திட்டனர். முதல்வர் உதயசூரியன், வணிகவியல் பள்ளி மற்றும் சமூகவியல் பணித்துறை துறைத்தலைவர் கனகரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.