சிறப்பு தொழில் கடன் விழா: மாவட்டத்தில் இன்று துவக்கம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சிறப்பு தொழில் கடன் விழா: மாவட்டத்தில் இன்று துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
00:47

கோவை,:தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு தொழில் கடன் விழா, மாவட்டத்தில் இரு இடங்களில் இன்று தொடங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது.தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் நிறுவனம். ஏராளமான தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி, தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக உள்ளது.இந்நிறுவனம், சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவவும், தற்போது இயங்கும் பிரிவுகளை விரிவுபடுத்தவும், உற்பத்தியை பன்முகப்படுத்தவும், சிறப்பு திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் கோவை, குறிச்சி கிளை அலுவலகங்களில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா டிச.,8 (இன்று) முதல் 15 வரை நடக்கிறது.இந்த சிறப்பு தொழில் கடன் விழாவில், டி.ஐ.ஐ.சி.,யின் சிறப்பு தொழில் திட்டங்கள், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூலதன மானிய திட்டங்கள், டி.ஐ.ஐ.சி.,யின் ஆறு சதவீதம் வட்டி மானிய திட்டங்கள் குறித்து, விளக்கம் அளிக்கப்படுகிறது.தகுதி வாய்ந்த தொழில்களுக்கு, தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம், ஒன்றரை கோடி ரூபாய் வரை பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படுகிறது.விழாவில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு, ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். 'நீட்ஸ்' திட்டத்துக்கு ஆய்வு கட்டணத்தில் இருந்து விலக்கு உண்டு.இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X