சாரமேடு பள்ளி மாணவர்களுக்கு 'ரொம்ப அவசரம்! '320 பேருக்கு மூன்றே கழிப்பறை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

08 டிச
2021
02:16
பதிவு செய்த நாள்
டிச 08,2021 00:54

கோவை:மாணவர்கள் இல்லாததால் சில அரசுப்பள்ளிகள் மூடப்பட்டன. ஆசிரியர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன். கொரோனா வந்து சென்ற பின் நிலைமையே வேறு. அரசு, மாநகராட்சிப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆனால் கழிப்பறை, வகுப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்தாததால், மாணவ மாணவியர் தவிக்கின்றனர்.



உக்கடம் சாரமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. 320 மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளியில், நான்கு வகுப்பறைகளும், மூன்றே கழிவறைகளும் உள்ளதால், மாணவர்கள் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.இப்பள்ளி கிட்டத்தட்ட, 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. இங்கு, கொரோனாவுக்கு முன்பு, 180 மாணவர்களே படித்து வந்தனர். மொத்தம் நான்கு வகுப்பறைகள், மூன்று கழிவறைகள் இருப்பதோடு, வகுப்பு கையாள ஐந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், கொரோனாவுக்கு பின், இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை, 320 ஆக உயர்ந்துள்ளது.ஆனால், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, அடிப்படை வசதிகள் இல்லாததால், இடநெருக்கடியால் திணறும் நிலை தொடர்கிறது.



தமிழ், ஆங்கில வழிக்கு, பிரத்யேகமாக சேர்க்கை நடத்தியும், ஒரே வகுப்பில் இரு பிரிவு மாணவர்களையும் அமர வைத்தே, வகுப்பு கையாளும் நிலை நீடிக்கிறது. கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டுமென, பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பள்ளி தலைமையாசிரியர் சுந்தர் கூறுகையில், ''திடீரென மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால், இடநெருக்கடி இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.



கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டித்தர வேண்டுமென, மாநகராட்சிக்கு 'புரப்போசல்' அனுப்பியுள்ளோம்,'' என்றார்.மாநகராட்சி கல்வி அலுவலர் பாண்டியராஜசேகரனிடம் கேட்டபோது, ''சாரமேடு பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் கிணறு இருப்பதால், மண் பரிசோதனை செய்த பிறகே கட்டுமான பணிகளை தொடங்க முடியும். கூடுதல் கழிவறை கட்டித்தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும்,'' என்றார்.


தற்காலிகமாக ஐந்து கழிப்பறைகளையாவது முதல் கட்டமாக கட்ட, மாநகராட்சி கமிஷனர் முன்வர வேண்டும்.எப்படிங்க பயன்படுத்த முடியும்ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம் கூறுகையில், ''பள்ளியில் உள்ள மூன்று கழிவறைகளை, 320 மாணவர்கள் எப்படி பயன்படுத்த முடியும். நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில், படிக்க குழந்தைகள், ஒப்பணக்கார வீதி, குனியமுத்துார் பகுதியில் உள்ள, அரசுப்பள்ளிகளுக்கு தான் செல்ல வேண்டும்.


தற்போது புல்லுக்காடு பகுதியில், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு தங்குவோருக்கும் பிரத்யேக பள்ளி தேவைப்படுவதால், ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியை இப்பகுதியில் தனித்தனியாக அமைக்கலாம். இப்பகுதியில் பிரத்யேக பள்ளிக்கூடம் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X