இரு குழந்தையுடன் தாய் தற்கொலை | கரூர் செய்திகள் | Dinamalar
இரு குழந்தையுடன் தாய் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
00:54

குளித்தலை:குடும்ப பிரச்னை காரணமாக, இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல், 35, டெக்ஸ்டைல் தொழிலாளி. இவரது மனைவி சரண்யா, 30. தம்பதிக்கு கனிஷ்கா, 6, புவிஷா, 3, என இரு மகள்கள் உள்ளனர்.மதுவிற்கு அடிமையான சக்திவேல் மனைவியின் நகைகளை விற்றுள்ளார். இதனால் சரண்யா மீதமிருந்த, 8 சவரன் நகைகளை தன் தாயிடம் கொடுத்து வைத்திருந்தார்.

இந்நிலையில், சக்திவேலுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த சரண்யா இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு, அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தீயணைப்பு வீரர்கள் மூவர் உடல்களையும் மீட்டனர்.இது குறித்து சரண்யாவின் தாய் சாந்தி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X