வரும் 18ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களை அழைக்கிறார் கலெக்டர் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வரும் 18ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களை அழைக்கிறார் கலெக்டர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
00:58

கோவை:கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வரும், 18ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன், சமூக இடைவெளியுடன் வரும், 18ம் தேதி ஈச்சனாரி, ரத்தினம் கல்லுாரியில் காலை, 9:00 மணியளவில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



உற்பத்தி துறை, ஜவுளி, இன்ஜி., ஐ.டி., கட்டுமானம், ஆட்டோமொபைல்ஸ், விற்பனை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உட்பட, 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யஉள்ளனர்.முகாமுக்கு வரும் அனைத்து இளைஞர்களும், சுயவிபரம் மற்றும் கல்வி சான்று நகல்களுடன் பங்கேற்க வேண்டும்.
பங்கேற்க வயது வரம்பு இல்லை. தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும்.நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் மனுதாரர்கள்,www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில், விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.கலந்து கொள்ள அனுமதி இலவசம். விபரங்களுக்கு, 94990 55938 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X