ரூ.5.60 கோடி மோசடி: தொழிலதிபருக்கு வலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
01:04

கிருஷ்ணகிரி:பெண்ணிடம் 5.60 கோடி ரூபாய் மோசடி செய்த .தொழிலதிபர் குடும்பத்தினர் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


ஏமாற்றம்




கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பழைய மத்திகிரியைச் சேர்ந்தவர் மேகநாதன், 51; இவர் மனைவி ஜெயலட்சுமி, 46; இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த, 'ரியல் எஸ்டேட்' மற்றும் 'லாரி டிரான்ஸ்போர்ட்' தொழில் நடத்தி வந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினர் பழகி வந்தனர். கடந்த, 2015ல் தன் தொழிலில் பங்குதாரராக சேர்ந்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக ரவிச்சந்திரன் கூறி, ஜெயலட்சுமி மற்றும் மேகநாதனிடம், 50 லட்ச ரூபாய் பெற்று, லாபத்துடன் திருப்பி கொடுத்துள்ளார்.


பின் ஜெயலட்சுமியிடம் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறி, பணம் பெற்று கொடுத்தால், அதற்கும் லாபத்தில் பங்குதருகிறேன் என்றார்.ரவிச்சந்திரனை நம்பி, ஜெயலட்சுமி தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி 5.60 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.அதன்பின் ஜெயலட்சுமிக்கு பணத்தை தராமல் ரவிச்சந்திரன் ஏமாற்றிஉள்ளார். இதுகுறித்து, நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயலட்சுமி புகார்படி, டி.எஸ்.பி., ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார், ரவிச்சந்திரன், அவரது மனைவி லதா, மகன் ராகுல் மற்றும் சுபாஷ் ஆகிய நான்கு பேரை தேடி வருகின்றனர்.


ஆசிரியை 'சஸ்பெண்ட்'




வேலுார் மாவட்டம், கொணவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 55. இவர், இங்குள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.இவர் கணவர் தர்ம லிங்கம், 60, ஒய்வு பெற்ற எஸ்.ஐ., இருவரும் சேர்ந்து, 2018ல், வேலுாரில் கார், லாரி, ரியல் எஸ்டேட் தொழில் துவங்கி, இதில் முதலீடு செய்தால், அதிக வட்டி கொடுப்பதாக கூறினர்.


இதை நம்பி ஆசிரியைகள், பொது மக்கள் என, 50க்கும் மேற்பட்டவர்கள், 50 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்தனர்.அசலையும், வட்டியையும் கொடுக்காததால், பாதிக்கப் பட்டவர்கள் வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2ல் மகேஸ்வரியை கைது செய்து மகளிர் சிறையில் அடைத்தனர். இதையடுத்து வேலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி, அரசு நன்னடத்தை விதிகளின்படி மகேஸ்வரியை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X