கள்ளக்காதல் ஜோடி தற்கொலை | செய்திகள் | Dinamalar
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
01:13

காரைக்கால்:கள்ளக்காதல் ஜோடி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
புதுச்சேரி காரைக்காலைச் சேர்ந்தவர் ஹாஜா பகுருதீன், 40, மளிகை கடை ஊழியர். இவரது மனைவி விஷ்வத் நாச்சியாள், 29. தம்பதிக்கு மூன்று குழந்தைகள்உள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்த அபுதாஹீர், 30; கார் டிரைவர். திருமணம் ஆகாத இவருடன், விஷ்வத் நாச்சியாளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததை அறிந்த கணவர் ஹாஜா பகுருதீன் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர்.
இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் விஷ்வத் நாச்சியாள், அபுதாஹீர் இருவரும், அபுதாஹீர் உறவினர் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். விஷ்வத் நாச்சியாள் தற்கொலைக்கு முன், கடிதம் எழுதி வைத்துள்ளார். கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

கடிதத்தில், 'குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். வாழமுடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு சம்பவம்
தேனி மாவட்டம், கூடலுார்ஜக்கன நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் வீருசிக்கு, 48. இவர் மனைவி முத்து லட்சுமி, 38. நேற்று முன்தினம் காலை இருவரும் விவசாய நிலத்தில் மொச்சை செடிகளுக்கு மருந்து தெளிப்பதற்கு செல்வதாக கூறி சென்றனர்.
மாலை வரை வீடு திரும்பாததால் அவரது மகன்கள் கூடலுார் தெற்கு போலீசில் புகார் செய்தனர்.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நேற்று காலை இருவரும் விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரிந்தது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X