சென்னை:ராமநாதபுரம் உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவ மழைக்கான காற்று வீசுவதால் கடலுார், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்..
நாளை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, துாத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.