பெசன்ட் நகரில் மயான பூமி மூடல் | சென்னை செய்திகள் | Dinamalar
பெசன்ட் நகரில் மயான பூமி மூடல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
04:04

சென்னை, டிச. 8- பெசன்ட் நகர் ஹிந்து மயான பூமி பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்படுகிறது.

இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:அடையாறு மண்டலம், 176வது வார்டு, பெசன்ட் நகர் ஹிந்து மயான பூமியின் எரிவாயு தகனமேடையில், பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இன்று முதல், ஜனவரி 21ம் தேதி வரை பணிகள் நடைபெறுவதால், மயான பூமி இயங்காது.பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில், பாரதி நகர், நியூ காலனி, வேளச்சேரி மயான பூமி, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லுாரி அருகில் உள்ள மின் மயான பூமி ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X