குடியிருப்புகளை ஜப்தி செய்ய முயற்சி; எம்.எல்.ஏ., போராட்டத்தால் திரும்பிய அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
04:21


புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் குடியிருப்புகளை ஜப்தி செய்ய வந்த கோர்ட் அமீனாக்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனர்.



முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட காட்டாமணிகுப்பம் பகுதி யில் உள்ள நிலம் தொடர்பாக கடந்த 1979ம் ஆண்டு சந்திரசேகர் என்பவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த இடத்தை, வேறு ஒரு நபர், 27 பேருக்கு தனித்தனி மனைகளாக விற்பனை செய்துள்ளார். அதில் தற்போது 27 குடும்பத்தினர் வீடு கட்டி, வசித்து வருகின்றனர்.



நிலம் தொடர்பான வழக்கில் கடந்த 2003ம் ஆண்டு, சந்திரசேகருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. ஆனால், இடத்தை காலி செய்து கொடுக்க முடியவில்லை.இந்த நிலையில், நேற்று புதுச்சேரி நீதிமன்ற அமீனாக்கள் 6 பேர், குடியிருப்புகளை ஜப்தி செய்ய வந்தனர்.குடிநீர், மின் இணைப்பை துண்டிக்க பொதுப்பணி, மின் துறையினர் வந்தனர். வருவாய்த் துறையினர் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசாரும் வந்திருந்தனர்.இதை அறிந்த பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., நேற்று காலை 10:00 மணிக்கு, நீதிமன்ற அமீனாக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.



27 குடும்பத்தினரும் 3வது நபரிடம் மனைகளை வாங்கியுள்ளனர். வழக்கு தொடர்பாக பலருக்கு தெரியாது. எனவே, ஒரு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. மொத்த முள்ள 24 ஆயிரம் சதுரடி நிலத்தில், 12,000 சதுர அடி நிலத்தை மட்டும் பிரிக்க சர்வேயர்கள் நிலத்தை அளந்தனர்



.அப்போது, தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நிலத்தின் திசைகள் சரியாக குறிப்பிடவில்லை என பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., மற்றும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். சரியான திசையை வரையறுக்க கோரிக்கை விடுத்தனர்.இதனால் நேற்று மாலை 5:00 மணி வரை ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் அமீனாக்கள் திரும்பி சென்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X