புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு போலீசார் நடத்திய திடீர் வாகன சோதனையை, ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் ஆய்வு செய்தார்.புதுச்சேரியில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ரவுடிகள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.இந்நிலையில், புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் அடுத்த கலித்தரம்பட்டு கிராமத்தில் நேற்று தாயையும் மகளையும் கொன்று, நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புதுச்சேரியில் பதுங்கியிருக்கலாம் என தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று இரவு நகரம், கிராமங்களில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பத்துக்கண்ணு, வில்லி யனுார், திருக்கனுார், திருபுவனை உள்ளிட்ட இடங்களில் நடந்த வாகன சோதனையை, ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன் ஆய்வு செய்தார். இரவு நேர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது சீனியர் எஸ்.பி., (பொறுப்பு) தீபிகா, எஸ்.பி.,க்கள் ஜிந்தா கோதண்டராமன், ரங்கநாதன் உடனிருந்தனர்.