விழுப்புரம் : தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார்.
இதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட டி.ஜி.பி., மீதும், பெண் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி., ஆகியோர் ஆஜராகவில்லை.
நேற்று விசாரித்த நீதிபதி, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., தரப்பு கோரிக்கையை நிராகரிப்பு செய்து அவர் தாக்கல் செய்திருந்த நான்கு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பின், வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு, ஒத்திவைத்தார். அன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி, அவரது கணவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அப்போதைய பெரம்பலுார் ஏ.டி.எஸ்.பி.,யும் தற்போது துாத்துக்குடியில் பணிபுரியும் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்.
அன்றைய தினம் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியிடம், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., தரப்பு கட்டாயம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.