தாய், மகள் அடித்துக் கொலை கண்டமங்கலம் அருகே பயங்கரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
04:30

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே தாய், மகள் அடித்துக் கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்



.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த கலித்திரம்பட்டு கண்டசாவடியைச் சேர்ந்தவர் சரோஜா, 80; கணவரை இழந்தவர். மகள் பூங்காவனம், 56; இவரது கணவர் தங்கவேலு. பல ஆண்டுகளுக்கு முன் மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். சரோஜா, பூங்காவனம் தனியாக வசித்து வந்தனர்.



இருவரும் நேற்று காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. அருகில் வசிக்கும் சரோஜா மருமகள் அம்சவள்ளி, கதவை திறந்து பார்த்தார். இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. பூங்காவனம் நிர்வாண நிலையில் கிடந்தார்.இருவரும் அணிந்திருந்த செயின், மோதிரம், மூக்குத்தி, கம்மல் என அனைத்து நகைகளும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி., ஸ்ரீநாதா, டி.எஸ்.பி., பார்த்திபன், கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.மோப்ப நாய் ராக்கி மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எஸ்.பி., ஸ்ரீநாதா கூறுகையில், 'கொலையாளிகளைப் பிடிக்க விழுப்புரம் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவர்' என்றார்.பூங்காவனம் மகள் வள்ளி, 29; திருமணமாகி புதுச்சேரி தர்மாபுரியில் வசிக்கிறார். நேற்று முன்தினம் காலை பூங்காவனம் தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைப் பார்க்க புதுச்சேரி சென்று மாலை வீடு திரும்பியுள்ளார்.இந்நிலையில் இருவரும், நள்ளிரவில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இருவரும் தனியாக இருந்ததை நோட்டமிட்டு நகைக்காக அடித்து கொலை செய்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், இருவரும் கொலை செய்யப்படுவதற்கு முன் பூங்காவனம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முகமூடி நபர் அட்டகாசம்கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடியைச் சேர்ந்தவர் நாகலிங்கம். அவரது மனைவி அஞ்சம்மாள். செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் முகமூடி அணிந்த நபர் வீட்டிற்குள் புகுந்து அஞ்சம்மாளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவர் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த நபர், உருட்டுக்கட்டையால் கணவன், மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் தான் தற்போது இரட்டை கொலை மற்றும் கொள்ளை நடந்துள்ளது.கோவிலில் கொள்ளை முயற்சிகலித்திரம்பட்டு மாரியம்மன் கோவிலில் சில தினங்களுக்கு முன், மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முருகன் கோவில் முன்பு வேல் நடப்பட்டு இருந்தது. அதை பிடுங்கி வந்து மாரியம்மன் கோவில் கதவை உடைந்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் கோவிலில் இருந்த உண்டியலை உடைக்க முடியாததால் தப்பிச்சென்றுள்ளனர்.பின், அங்கிருந்து ஒன்றரை கி.மீ., தொலைவில் உள்ள, வம்புபட்டு, அய்யனாரப்பன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர். இது குறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முகமூடி நபர் அட்டகாசம்கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடியைச் சேர்ந்தவர் நாகலிங்கம். அவரது மனைவி அஞ்சம்மாள். செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் முகமூடி அணிந்த நபர் வீட்டிற்குள் புகுந்து அஞ்சம்மாளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.



அவர் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த நபர், உருட்டுக்கட்டையால் கணவன், மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் தான் தற்போது இரட்டை கொலை மற்றும் கொள்ளை நடந்துள்ளது.



சிக்கிய 'கஞ்சா' பார்ட்டிகலித்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 40 வயது நபர் திருமணமாகி விழுப்புரம் பகுதியில் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர், ஒரு வாரமாக சொந்த ஊரில் எப்போதும் குடி மற்றும் கஞ்சா போதையில் நடமாடியுள்ளார். அந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X