பருவ மழைக்கு திக்குமுக்காடிய கோடம்பாக்கம் மண்டலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
04:39


கோடம்பாக்கம் ; நீர்வழித்தடங்கள், மழை நீர் பாதைகள் ஆக்கிரமிப்பால், கோடம்பாக்கம் மண்டலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறி, மக்களை திக்குமுக்காட செய்தது. வடபழநி, காவாங்கரை கிளை கால்வாய், ராஜமன்னார் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நெசப்பாக்கம் - அடையாறுக்கு புதிய கால்வாய் அமைத்தால் மட்டுமே, வருங்காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.கோடம்பாக்கம் மண்டலத்தில் 127 -- 142 வரை 16 வார்டுகள் உள்ளன. இம்மண்டலத்தின் எல்லையில் கூவம் ஆறும், அடையாறும் செல்கிறது. மேலும், மாம்பலம், ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர்., நகர், விரும்பாக்கம், காவாங்கரை கிளை என, ஐந்து கால்வாய்கள் பாய்கின்றன.




அடையாற்றின் கரையோரம் தடுப்பு சுவர் இல்லாத காரணத்தால், எம்.ஜி.ஆர்., நகர் பகுதியும், காவாங்கரை கிளை கால்வாய் ஆக்கிரமிப்பால் வடபழநி 100 அடி சாலையியும், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன.முடங்கிய போக்குவரத்து கோடம்பாக்கம் மண்டலத்தின் பிரதான சாலைகளான, வடபழநி 100 அடி சாலை, ராஜமன்னார் சாலை, கே.கே.நகர் சாலை, அருணாச்சலம் சாலை, ஆர்.கே., சண்முகம் சாலை, பி.டி., ராஜன் சாலை, காமராஜர் சாலை, ரங்கராஜபுரம் பிரதான சாலை, அரிய கவுடா சாலை, சைதாப்பேட்டை சாலை.மேலும், கண்ணப்பர் சாலை, சவுந்தரபாண்டியன் சாலை, நடேசன் சாலை, ஜி.என்., செட்டி சாலை, தியாகராயர் சாலை, டாக்டர். நாயர் சாலை, பசுல்லா சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.



மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கோயம்பேடுகோயம்பேடில் கூவம் ஆற்றை ஒட்டியுள்ள மெட்டுக்குளம், நியூ காலனி பகுதிகள் முழுதும் கடுமையாக பாதிக்கப்பட்டன.விருகம்பாக்கம்விருகம்பாக்கம் கால்வாய் கூவம் ஆற்றில் கலக்கிறது. கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கால்வாய் நிரம்பி வழிந்ததால், கால்வாய் வழித்தடத்தை ஒட்டி உள்ள, சாய் நகர், சஞ்சய் காந்தி நகர், கிழக்கு வன்னியர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதில், வேம்புலியம்மன் கோவில் தெருவில் உள்ள குளம் நிரம்பி வழிந்ததால், வேம்புலியம்மன் கோவில் தெரு மற்றும் லாம்பர்ட் நகர் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.சாலிகிராமம்சாலிகிராமத்தில் மழை நீர் வடிகால் முறையாக துார் வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு வெள்ள பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், சட்டவிரோதமாக மழை நீர் வடிகாலில் கழிவு நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.வடபழநிவடபழநி பகுதியில் உள்ள காவாங்கரை கிளை கால்வாய், கோயம்பேடு புல் கால்வாயில் இருந்து பிரிந்து, வடபழநி, திருநகரில் துவங்கி, எம்.எம்.டி.ஏ., சூளைமேடு வழியாக கூவம் ஆற்றில் கலக்கிறது.திருநகர் அருகே இந்த கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதைபோல், எம்.எம்.டி.ஏ., காலனி, சூளைமேடு பகுதிகளில் கால்வாய் இருந்த தடம் தெரியாமல் உள்ளன. இதனால், வடபழநி 100 அடி சாலை உட்பட பல தெருக்கள் பாதிக்கப்பட்டன.கே.கே., நகர்கே.கே.நகர் பகுதி ஒவ்வொரு மழைக்கும் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. எம்.ஜி.ஆர்., கால்வாய் முகத்துவாரம் அருகே உள்ள கே.கே.நகர் 2வது செக்டார் பகுதியில் மழை நீர் தேங்கியது.



ஆர்.கே., சண்முகம் சாலை, பி.டி., ராஜன் சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகள் வழியாக, ராஜமன்னார் சாலையில் உள்ள மழை நீர் வடிகாலின் கொள்ளளவை விட, ஐந்து மடங்கு மழைநீர் வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கி விடுகிறது.அசோக் நகர்அசோக் நகர் 100 அடி சாலையில், நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் முழுமை அடையாமல் உள்ளதால், 100 அடி சாலையில் இருந்து வெளியேறிய மழை நீர், அனைத்தும், 16, 18, 19 அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியது.அசோக் பில்லர் சாலையின் குறுக்கே உள்ள மழை நீர் வடிகால் கல்வெட்டில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அடையாற்றிற்கு மழை நீர் செல்லவில்லை. இதனால், கே.கே.நகர் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் மழை நீர் தேங்கியது.கோடம்பாக்கம்கோடம்பாக்கத்தில் சுப்பராயன் நகர், ரங்கராஜபுரம் பிரதான சாலை, பராங்குசுபுரம், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன. ரங்கராஜபுரம் 'டூ - வீலர் சப்வே' மூன்று முறை மூடப்பட்டது. இதில், பராங்குசுபுரம் மற்றும் அஜீஸ் நகரில் இருந்து வெளியேறும் மழை நீர், ரயில்வே கல்வெட்டு, 44 வழியாக, 9வது மண்டலம் பகுதிக்கு செல்கிறது.சுப்ரமணிய நகரில் இருந்து வெளியேறும் மழை நீர், ரயில்வே கல்வெட்டு, 45 வழியாக தி.நகர் செல்கிறது. இந்த ரயில்வே கல்வெட்டுகளில் உள்ள அடைப்புகள் மற்றும் குறுக்கே செல்லும் கேபிள்கள் நீரோட்டத்திற்கு தடையாக உள்ளன.மேற்கு மாம்பலம்மேற்குமாம்பலம் முழுதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. லேக் வியூ சாலை, தம்பையா சாலை காந்தி தெரு, எல்லையம்மன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் முறையாக இணைக்கப்படாமல் உள்ளன.மேலும், 135 வது வார்டில் வெளியேறும் மழை நீர் மேற்கு மாம்பலத்திற்கு வருகின்றன. இதனால், அதிகளவில் மழை நீர் தேங்கின.மேற்கு சைதாப்பேட்டைஅண்ணா சாலையில் நெடுஞ்சாலையில் துறை சார்பில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் முறையாக இணைப்பு வழங்கப்படவில்லை.



இதன், காரணமாக அண்ணா சாலையில் இருந்து வெளியேறி மழை நீர் அனைத்தும், பசார் சாலையில் தேங்கின.தி.நகர்மேற்கு மாம்பலத்தை போன்று தி.நகரும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பசுல்லா சாலையில் தொடர்ந்து மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து மாற்றப்பட்டது.மேலும், தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை மற்றும் தி.நகர் பஸ் நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது. தி.நகர் பகுதியில் இருந்து வெளியேறும் மாம்பலம் கால்வாயில் மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் தி.நகருக்கு வருகின்றன. மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் பல இடங்களில் முறையாக இணைக்கப்படவில்லை.காளியம்மன் கோவில் தெரு விரிவாக்கம் பணிகள், மெட்ரோ பணியால் தடைபட்டுள்ளது. காளியம்மன் கோவில் தெருவில் மழை நீர் வடிகால் கட்டி, அதன் அருகே உள்ள பகுதிகளை இணைத்து, விருகம்பாக்கம் கால்வாய்க்கு எடுத்து சென்றால் மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்.செ.அருமைநாதன், 75;விருகம்பாக்கம்.மேற்கு மாம்பலத்தின் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால் முறையாக இணைக்கப்படவில்லை.




அதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து, வரும் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாதபடி தடுக்க வேண்டும்.எஸ்.பாலாஜி, 54;- மேற்கு மாம்பலம்.மழை நீர் பாதை எப்படி? கோயம்பேடு, நியூ காலனி, மெட்டுக்குளம் பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீர் கூவம் ஆற்றிற்கும், விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் விருகம்பாக்கம் கால்வாய்க்கு செல்கிறது. நெசப்பாக்கம், முனிசாமி சாலை, வன்னியர் தெரு, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெளியேறும் மழை நீர் ராஜமன்னார் சாலை, ராமாசாமி சாலை வழியாக எம்.ஜி.ஆர்., கால்வாய்க்கு செல்கிறது. மேற்கு மாம்பலம் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர், 135வது வார்டு லட்சுமி தெரு வழியாக, 140 வது வார்டு சென்று, மண்டலம், 13ல் உள்ள ரெட்டிக்குப்பம் கால்வாய்க்கு செல்கிறது.




கோடம்பாக்கம் ரங்கராஜபுரம், சுப்ரமணி நகரில் இருந்து வெளியேறும் மழை நீர், ரயில்வே கல்வெட்டு, 45 வழியாக தி.நகர் உஸ்மான் சாலை சென்று, மாம்பலம் கால்வாய்க்கு செல்கிறது. தி.நகர் பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீர், பசுல்லா சாலை, ஜி.என்., செட்டி சாலை, மண்டலம் 9 வழியாக செல்லும் மாம்பலம் கால்வாய்க்கு செல்கிறது.




மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீர், மண்டலம், 13ல் உள்ள ரெட்டி குப்பம் கால்வாய்க்கும், நந்தனம் மற்றும் மாம்பலம் கால்வாய்க்கும் செல்கிறது.தீர்வு என்ன?விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை விரிவாக்கம் செய்து, மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும். நெசப்பாக்கம், கான் நகர் வழியாக அடையாற்றிற்கு புது கால்வாய் அமைப்பது, ராஜமன்னார் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகாலின் அகலம் அதிகரிக்க வேண்டும்.மேலும், அசோக் நகர், 100 அடி சாலையில் மழை நீர் வடிகாலை இணைப்பது உள்ளிட்டவை ஓரளவு பாதிப்பை தடுக்க உதவும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X