சிறுவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
04:39

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பைக் மோதிய விபத்தில் பலியான சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்த சற்குணம், 35; இவரது மனைவி மஞ்சுளா, 30; மகன் அஜய், 8; மகள் அஜிதா, 2; அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி செந்தாமரை, 43.



இவர்கள் நேற்று முன் தினம் மாலை 6.30 மணியளவில், விருத்தாசலம் - ஆலடி சாலை, தே.கோபுராபுரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றனர்.செம்பளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் ராஜேஷ்குமார்,19. பிளஸ் 2 படித்தவர். இவர் நேற்று முன்தினம் மதுபோதையில் பைக் ஓட்டி வந்தார். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற மஞ்சுளா, அஜய், அஜிதா, செந்தாமரை மீது பைக் மோதியது.இதில், சிறுவன் அஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய ராஜேஷ்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிறுவன் உடல் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைத்தனர்.



உறவினர்கள் மறியல் விபத்து நடந்த இடம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனை மூடக் கோரி, சிறுவன் அஜய் உடலை வாங்க மறுத்து, விருத்தாசலம் கடைவீதியில் நேற்று பகல் 12:00 மணியளவில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் பேச்சு நடத்தி, டாஸ்மாக் கடையை மூட சப் கலெக்டரிடம் மனு அளிக்க கூறி அறிவுறுத்தினர். இதையடுத்து சப் கலெக்டர் ராம்குமாரிடம் மனு அளித்தனர். அவர், மூன்று நாட்களுக்குள் தே.கோபுரபுரம் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பிறகே சிறுவன் உடலை வாங்க உறவினர்கள் சம்மதித் தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X