வெள்ளம் பாதித்த இடங்களில் மேலாண்மை குழுவினர் ஆய்வு | சென்னை செய்திகள் | Dinamalar
வெள்ளம் பாதித்த இடங்களில் மேலாண்மை குழுவினர் ஆய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
04:55

கோடம்பாக்கம், : கோடம்பாக்கம் மண்டலத்தில், சென்னை வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குழுவினர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையிலான சென்னையின் வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குழுவை, அக்டோபர் மாதம் தமிழக அரசு அமைத்தது.இக்குழுவில், வெள்ள பாதிப்புகளை குறைக்கவும், வெள்ள நீர் வடிகால்களை அமைக்கவும், சுற்றுச்சூழல், நகர திட்டமிடல், பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுனர்கள், 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர், நேற்று இரண்டாக பிரிந்து கோடம்பாக்கம் மண்டலத்தில் மழை நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்தனர்.இதில், மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி, அசோக் நகர், 18 அவென்யூ, கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோவில் தெரு, தி.நகர் பசுல்லா சாலை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் உள்ளிட்ட பகுதியை ஆய்வு செய்தனர். பாதிப்புகள் குறித்து, பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.இந்த ஆய்வின்போது, கோடம்பாக்கம் மண்டல செயற்பொறியாளர்கள் பெரியசாமி மற்றும் புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X