காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
05:13

கடலுார் நகரில் போக்குவரத்துசாலை சீரமைப்பு பணி மந்தம்கடலுார் மாவட்டத்தில் பெய்த கன மழையில் கடந்த 19ம் தேதி அதிகாலை ஒரே நேரத்தில் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு வந்தது.




ஆற்றின் கரைகள் பலப்படுத்தாத தால், நடுப்பகுதிகள் பல இடங்களில் புதர்கள் மண்டி, துார் வாராமல் தண்ணீர் செல்ல முடியாமல், கரைகள் உடைத்துக் கொண்டு, வயல்வெளிகள், நகர் பகுதிகள், கிராமங்களில் புகுந்தது.இதில் கடலுார் கஸ்டம்ஸ் சாலைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்தது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்த போதும், ஆற்றின் கரைகள் அரிப்பு ஏற்பட்டு, கடலுாரில் இருந்து பட்டாம்பாக்கம் வரையுள்ள கஸ்டம்ஸ் சாலையில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.



20க்கும் மேற்பட்ட இடங்களில் கரைகளை பலப்படுத்தும் பணி நடக்கிறது.கஸ்டம்ஸ் சாலையில் கலெக்டர் அலு வலகம் எதிரே கும்மத்தான்மேடு தடுப்பணையையொட்டி தண்ணீர் அதிகளவு ஓடியதால் சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடை மண் அரிப்பால் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது.ஆற்றின் கரையோரமுள்ள சாலை இடிந்து விழுந்தது. அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.சாலையின் பெரும் பகுதி ஆற்றில் அடித்துச் சென்றதால், அவ்வழியாக நடந்து கூட செல்ல முடியவில்லை.கஸ்டம்ஸ் சாலை துண்டிக்கப்பட்டு கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு செம்மண்டலம் வழியாக சென்ற வாகனங்கள், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை வழியாகஒரு வழிப்பாதையில் இயக்கப்படுகிறது.இந்த போக்குவரத்து நெரிசல் கடலுார் நகரம் முழுவதும் உள்ளதால், ஒரு வழிப்பாதையாக இருந்த நேதாஜி சாலை இரு வழி சாலையாக மாற்றப்பட்டது. அதனால் தினம் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.




பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் அதிகம் பாதிக்கின்றனர்.இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து இல்லாத சாலையாக தேர்ந்தெடுத்து செல்கின்றனர். குண்டுசாலையில் இருந்து திரும்பும் கனரக வாகனங்கள் சண்முகம் பிள்ளைத் தெரு வழியாகவும், சப் ஜெயில் ரோடு வழியாகவும், பாஷியம் ரெட்டி சாலை வழியாகவும், உப்பலவாடிதெரு வழியாகவும் செல்கின்றன.நகரில் மிகவும் குறுகலான சாலையில் ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்து ஸ்தம்பித்து வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.மஞ்சக்குப்பத்தில் உள்ள வாகனங்கள் பஸ் நிலையத்தை அடைய தற்போது அதிக நேரம் ஆகிறது. பழைய கஸ்டம்ஸ் சாலையை போர்கால அடிப்படையில் சீரமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X