கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் கொடி நாள் விழா நடந்தது.கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி, கொடிநாள் உண்டியல் வசூலை துவக்கி வைத்தார். அவர் கூறுகையில், கடலுார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.73. 32 லட்சம் கொடி நாள் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது.
அதை விட கூடுதலாக அனைத்து துறை அலுவலர்களும் செய்து தரவேண்டும். மக்கள் கொடிநாள் வசூலிற்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும்.கொடிநாள் வசூல் மூலம் பெறும் நிதியின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு நலத் திட்ட உதவிகள் அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு முன்னாள் படை வீரர்களுக்கான கல்வி நிதியுதவி 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், திருமண நிதியுதவியாக 4 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் உட்பட 12 பயனாளிகளுக்கு ரூ.1.66 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தெய்வசிகாமணி, கண்காணிப்பாளர் இந்திராகாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.