கடலுார் : கடலுார், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று துவங்கிய யாக சாலை பூஜையில் அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்றார். கடலுார், புதுப்பாளையம் செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 9ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி யாக சாலை பந்தலில் 21 யாக குண்டங்கள், பெருமாளுக்கு பஞ்ஜாத்மி குண்டம் அமைத்து நேற்று யாக சாலை பூஜைகள் துவங்கியது.யாக சாலை பூஜையில் அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து, திருப்பணிகளை ஆய்வு செய்து பாராட்டினார். உபயதாரர் ஜி.ஆர்.கே., எஸ்டேட் துரைராஜ் வரவேற்றார். கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், சுதன் பவர் டெக் பூங்குன்றன், ஊராட்சித் தலைவர் பிரகாஷ், முன்னாள் ஊராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், எம்.கே.ஜே., பவுனாம்பாள் திருமண மண்டப உரிமையாளர் ஜனார்த்தனன், வக்கீல்கள் சிவமணி, முகுந்தன், ஸ்தபதிகள் கணேசன், சிவக்குமார், புவன சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று (8ம் தேதி) காலை 7:00 மணிக்கு அஷ்ட பந்தனம் சாற்றுதல், 11:00 மணிக்கு மகா சாந்தி திருமஞ்சனம், பூர்ணாகுதி சாற்றுமுறை நடக்கிறது. நாளை 9ம் தேதி காலை 5:30 மணிக்கு விஸ்வரூபம், புண்யாஹம், ஆராதனம், ேஹாமம், 7:15 மணிக்கு மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 8:45 மணிக்கு மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக பணிகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார், செயற் பொறியாளர் ஞானமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் அசோகன், உதவி பொறியாளர் சிவசங்கரி ஆய்வு செய்தனர்.