மங்களூர் ஒன்றியக் குழு கூட்டம் | கடலூர் செய்திகள் | Dinamalar
மங்களூர் ஒன்றியக் குழு கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
05:48

சிறுபாக்கம் ; மங்களூரில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாதாரணக் கூட்டம் நடந்தது.மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் கலைச்செல்வி, பி.டி.ஓ.,க்கள் தண்ட பாணி, சண்முக சிகாமணி முன்னிலை வகித்தனர்.



நிர்வாக மேலாளர் சங்கர் வரவேற்றார். கவுன்சிலர்கள் சரவணன், பாப்பாத்தி, மலர்விழி, செல்வராணி, மல்லிகா, ராமர், ராமலிங்கம், ராமச்சந்திரன், பிரபாகரன், பொறியாளர்கள் சண்முகம், மணிவேல், கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர். பழுதடைந்த மங்களூர் ஒன்றிய அலுவலகத்தை சீரமைப்பது. மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட 22 ஊராட்சிகளில் மிகவும் பழமையான பள்ளி கட்டடங்கள், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள், அங்கன்வாடி மையங்களை இடித்து அகற்றுவது. 15ம் நிதிக்குழு மானியத்தில் ரூ. 92 லட்சத்திற்கு குடிநீர் கைப்பம்பு, கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உட்பட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிமெண்ட் சாலைகள், கான்கிரீட் வீடுகள் உள்ளிட்ட திட்டப்பணிகளை செயல்படுத்த கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X