கரணம் தப்பினால் மரணம்... உடைந்த பாலத்தில் பயணம்! | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
கரணம் தப்பினால் மரணம்... உடைந்த பாலத்தில் பயணம்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
06:19

காஞ்சிபுரம், ; உடைந்த வெங்கச்சேரி செய்யாறு பாலத்தை, கிராம மக்கள் பலர், குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் கடக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பாலாற்று வெள்ளப்பெருக்கில் 1 லட்சம் கன அடி நீர் சென்றது.

இதனுடன் செய்யாற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் சாலையில், வெங்கச்சேரி கிராமத்தில், செய்யாற்றின் குறுக்கே செல்லும் பாலம் உடைந்தது.கடந்த 2015லேயே இந்த பாலம் உடைந்து, மணல் மூட்டைகள் வைத்து, ஆறு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டது.தற்போதைய வெள்ளத்தில் சுக்குநுாறாக பாலம் உடைந்ததால், வெங்கச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

தடுமாறி விழுந்தால், ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுவர்.குழந்தைகளுடன் பலர், ஆபத்தான முறையில் பாலத்தை கடந்து, மாகரல் கிராமத்திற்கு வந்து காஞ்சிபுரத்திற்கு பேருந்தில் செல்கின்றனர். மாவட்ட நிர்வாகத்துக்கு இந்த விபரம் தெரிந்தும், பாலம் பகுதியில் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவில்லை.அசம்பாவிதம் நடக்கும் முன், பாலத்தில் பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X