கல்வி விழிப்புணர்வு
பொன்னேரி: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர், திருவள்ளவாயல், தத்தைமஞ்சி, அரியன் வாயல், புதுப்பேடு ஆகிய கிராமங்களில், 'இல்லம் தேடி கல்வி' திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.வட்டார கல்வி அலுவலர்
முத்துலட்சுமி மேற்பார்வையில், வட்டார ஆசிரியர் பயிற்றுனர் கஜானந்தம் தலைமையில், கலைக் குழுவினர் நாடகம், பாடல், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இத்திட்டத்திற்கான தன்னார்வலர்கள் தேர்வு குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.