எம்.பி., சண்முகசுந்தரம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கஞ்சிக்கோடு முதல், மதுக்கரை வரை ரயில்பாதை, 'பி' லைன், வாளையார் முதல், எட்டிமடை வரை மற்றொரு ரயில்பாதை 'ஏ' லைன் என இரு ரயில்பாதைகள் உள்ளன. இந்த இரு ரயில்பாதைகளையும் யானைகள் கடக்கும் போது ரயில்கள் மோதி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், 11 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த ரயில்பாதையில் ரயில்களுக்கு நிரந்தர வேகத்தடை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
யானைகள் உயிரிழப்பதை தடுக்க மாலை, 6:00 முதல், காலை 6:00 மணி வரை இந்த ரயில் பாதைகள் வழியாக பாலக்காட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்களை பொள்ளாச்சி வழியாக திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரயில்களின் வேகத்தை, 30 கி.மீ., ஆக குறைக்க வேண்டும். அடர் வனப்பகுதிக்கு வெளியே உயர்மட்ட ரயில்பாதை, அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.