கரூர்: மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு, 36 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 25 ஆயிரத்து, 878 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 36 ஆயிரத்து, 975 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக, 36 ஆயிரத்து, 775 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு பாசன வாய்க்காலில், 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
* அமராவதி அணை நிலவரம்: நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து, 2,305 கன அடியாக இருந்தது. இதனால் ஆற்றில் வினாடிக்கு, 2,129 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 163 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 87.50 அடியாக இருந்தது.
* நங்காஞ்சி அணை நிலவரம்: திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால், 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது. இதனால், நங்காஞ்சி ஆற்றில் வினாடிக்கு, 99 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 99 கன அடி தண்ணீர் வந்தது.