ஓடுதளத்தில்... ஓராயிரம் ஓட்டைகள்! ஒரே துறையின் இரு பிரிவுகள் அக்கப்போர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
22:40

பொள்ளாச்சி : நெடுஞ்சாலைத்துறையில், இரு பிரிவுகள், ஒன்றுக் கொன்று அனுசரிக்காமல் இருப்பதால், பொள்ளாச்சி அருகே ரயில்வே பாலம் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று கொண்டுள்ளது.



மாநில நெடுஞ்சாலை துறையில், மேம்பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் செய்ய, திட்டங்கள் பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவின் கீழ், கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு, வழக்கமான நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்படும். இப்படி, நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள் பிரிவு வாயிலாக, பொள்ளாச்சி- மீன்கரை ரோடு சீனிவாசபுரத்தில், கடந்த, 2012ல் ரயில்வே துறையின் பங்களிப்புடன், ரயில் பாதையை கடக்கும் வகையில், தரையடி பாலம் அமைக்கும் திட்டப்பணி துவங்கப்பட்டு, 2014ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது. சில மாதங்களிலேயே, பாலத்தின் கான்கிரீட் ஓடுதளம் சிதையத்துவங்கியது.



அன்று முதல், இன்று வரை அவ்வப்போது கான்கிரீட் ஓடுதளம் சிதைவதும், அதை தற்காலிகமாக சீரமைப்பதும் தொடர்கதையாக உள்ளது. தற்போதும், ஓடுதளம் படு மோசமாக சிதைந்து, வாகன ஓட்டுனர்களை வீழ்த்தி வருகிறது.இதற்கு காரணம், தரமற்ற கட்டுமான பணி தான் என்ற குற்றச்சாட்டு, தொடர்ந்து எழுகிறது. மேலும், சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி இழுபறியில் இருந்ததால், பாலம் பராமரிப்பு பணி, திட்டங்கள் பிரிவு வசமே இருந்தது. தற்போது, சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி முடிந்து விட்டாலும், வழக்கமான நெடுஞ்சாலை துறை பாலத்தின் பராமரிப்பை ஏற்காமல் உள்ளது.



பாலத்தை ஒப்படைக்க திட்டங்கள் பிரிவு அதிகாரிகள் கடிதம் அளித்தாலும், தரமற்ற பாலத்தை ஏற்றுக்கொள்ள நெடுஞ்சாலை கோட்ட அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.பாலத்தின் கான்கிரீட் ஓடுதளத்தை முழுமையாக சீரமைத்துக் கொடுத்தால் மட்டுமே, தங்கள் வசம் ஏற்றுக் கொள்ளும் முடிவில் உள்ளனர்.



திட்டங்கள் பிரிவு அதிகாரிகள், ஓடுதளத்தை சீரமைக்கும் பணியை தாமதப்படுத்துவதால், மக்கள் தினசரி விபத்துக்குள்ளாகின்றனர்.ஒரே துறையின் இரு பிரிவுகள் அனுசரித்து போகமால் அடம் பிடிப்பதால், மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என்பதை உணர்ந்து, ஓடுதளத்தை உடனடியாக சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X