நெகமம் : நெகமம், நாகர் மைதானம் அருகே, அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இரு நாட்களுக்கு முன், மாணவர்களின் பெற்றோர், கழிப்பிடம் சுத்தமில்லை, குடிநீர் இல்லை, சுகாதாரம் பாதிப்பு உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
பள்ளிக்கு வந்த, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் ராஜசேகர் தீவிர விசாரணை மேற்கொண்டு, இரண்டு ஆண்டுக்கான தணிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழை நீர், குப்பைைய அகற்ற அறிவுறுத்தினார்.பள்ளி வளாகம் முழுவதிலும், ரோட்டோரத்திலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கழிவறைக்கு தேவையான பிளாஸ்டிக் பக்கெட்டுகள், மக்குகள் வைக்கப்பட்டன. பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் வாயிலாக, கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிக்கப்பட்டது.