பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவில், எட்டு பேருக்கு நேற்று, கொரோனா தொற்று உறுதியானது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, சேர்மன் வீதி, ஜோதிநகர் 'டி' காலனி, நியூ அழகப்பா லே - அவுட், விவேகானந்தர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம், ஐந்து பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. மேலும், தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜமீன் ஊத்துக்குளியில் ஒருவருக்கும், வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜமீன் முத்துாரில் ஒருவருக்கும், என, தாலுகாவில், மொத்தம், ஏழு பேருக்கு கொரோனா உறுதியானது.
கிணத்துக்கடவு தாலுகாவில், பெரியார் நகரில், ஒருவருக்கு நேற்று தொற்று பரவல் உறுதியானது. வால்பாறை, ஆனைமலை தாலுகாவில் நேற்று யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.