அமராவதி ஆயக்கட்டில் நெல் அறுவடைக்கு கவலையில்லை! இயந்திரங்கள், அரசு கொள்முதல் மையம் தயார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
22:55

உடுமலை : அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில், நவீன நெல் அறுவடை இயந்திரங்கள் மற்றும் நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டுள்ளது.



உடுமலை அருகேயுள்ள அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, கல்லாபுரம், ராமகுளம் உட்பட, ராஜவாய்க்கால் பாசனத்தில், 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது, உடுமலை வட்டாரம், கல்லாபுரம் பகுதியில், நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது.பருவ மழை அதிகளவு பெய்த நிலையில், தற்போது மழை குறைந்து, வெயில் அடித்து வருவதால், அறுவடையை வேகமாக மேற்கொள்ள, விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.



வழக்கமாக அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில், நெல் அறுவடைக்கு தேவையான இயந்திரங்கள் கிடைக்காமலும், அறுவடை செய்த நெல், விற்பனையாகாமல் தேங்குவதோடு, குறைந்த விலை தனியார் கொள்முதல் காரணமாக விவசாயிகள் பாதித்தனர்.கடந்தாண்டு, இப்பிரச்னைகளால் விவசாயிகள் கடுமையாக பாதித்த நிலையில், நடப்பாண்டு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.



அறுவடை இயந்திரங்கள்


அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில், தலைமடை பகுதியான கல்லாபுரத்தில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், மழை பெய்தாலும், நிலங்களில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், சேற்றிலும் அறுவடை செய்யும் திறன் கொண்ட, 'பெல்ட்' வகை இயந்திரங்கள் வேளாண் பொறியியல் துறை சார்பில், கல்லாபுரம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.நெல் கொள்முதல் மையம்விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், எலையமுத்துார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், நெல் நேரடி கொள்முதல் மையம் அமைக்கப்பட உள்ளது.



இங்கு, மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகையுடன், 'ஏ' கிரேடு நெல் ரகம், குவிண்டால், 2 ஆயிரத்து, 60 ரூபாய்க்கும், சாதாரண ரகம், 2 ஆயிரத்து, 15 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது.நாள்தோறும், ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதற்குரிய தொகை, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



அறுவடை இயந்திரம் பயன்பாடு மற்றும் நேரடி நெல் கொள்முதல் மையம் அமைப்பது குறித்து, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மகாதேவன், உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.



வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது : அமராவதி அணையை ஒட்டியுள்ள பகுதிகளில், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் அறுவடை துவங்கியுள்ளது. அறுவடைக்கு தேவையான இயந்திரங்கள் கிடைக்காதது மற்றும்நெல்லுக்குரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதித்து வந்தனர்.இதற்கு தீர்வு காணும் வகையில், தற்போது சேற்றிலும் அறுவடை செய்யும் திறனுடைய, 'பெல்ட் வீல்' உடன் கூடிய ஒரு இயந்திரம் வந்துள்ளது.மேலும், கூடுதல் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்து தருமாறு வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.



தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு, ஒரு மணிக்கு, 3,500 ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருந்தது. வேளாண் பொறியியல் துறை அறுவடை இயந்திரத்திற்கு, மணிக்கு, 1,630 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே போல், அறுவடை செய்த நெல், தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று வந்த சூழலுக்கு தீர்வு காண, அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டுள்ளது.மழையில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், ஈரப்பதம் ஓரளவு திருப்தியாக இருந்தாலும், நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கல்லாபுரம் பகுதியில், இரு மாதம் அறுவடை நடக்கும்; தொடர்ந்து, எலையமுத்துார், குமரலிங்கம் என தொடர்ந்து அறுவடை நடக்கும் வாய்ப்புள்ளதால், அறுவடை இயந்திரங்கள், நெல் கொள்முதல் மையம் அறுவடை முடியும் வரை செயல்படும்.எனவே, விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை இயந்திரங்கள் வாயிலாக, அறுவடை செய்வதோடு, அரசு கொள்முதல் மையத்தில், நெல் விற்பனை செய்து பயன்பெற வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X