கொரோனாவுக்கு பலியானவர் குடும்பத்துக்கு, ரூ.50 ஆயிரம் நிவாரணம்: வருவாய்த்துறையில் ஆயத்த பணி துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
23:07

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பலியான, 950 பேரில் குடும்பங்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய்நிவாரணம் வழங்குவதற்கான ஆயத்த பணி துவங்கியுள்ளது.



கடந்த, 2020 மார்ச் மாதம் துவங்கி, இரண்டு கட்ட கொரோனா அலைகளால், ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 1,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்; அவர்களில், வெளிமாவட்டத்தை சேர்ந்த, 50 நபர்கள் நீங்கலாக, மாவட்டத்தில், 950 நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.தமிழக அரசு, கொரோனாபாதித்து உயிரிழந்தவர்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



அதன்படி, மாவட்டம் தோறும், இறந்தவர் தொடர்பான முழு விவரங்கள் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாக்களிலும், கொரோனாவில் பலியானவர்கள் தொடர்பான விவரம் நேற்று சேகரிக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு - 251, உடுமலை - 173, திருப்பூர் தெற்கு - 158, தாராபுரம் - 109, பல்லடம் - 95, அவிநாசி - 71, காங்கயம் - 40, மடத்துக்குளம் - 30, ஊத்துக்குளி - 23 என, 950 பேர், மாவட்டத்தில் இறந்துள்ளனர்.இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனாவில் இறந்தவர்களுக்கும், முன்கள பணியின் காரணமாக, கொரோனாவில் இறந்தவருக்கும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.



கொரோனாவில் பெற்றோரில் ஒருவர் இறந்திருந்தால், மூன்று லட்சம் ரூபாய்.இருவரும் இறந்திருந்தால், குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. தற்போது, வழங்கப்படும், 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம், அவர்களுக்கு பொருந்தாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.



மாவட்டத்தில், இறந்த, 950 நபர்களில், 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் பெற தகுதயான வாரிசுதாரர்கள் கண்டறியப்பட்டு வழங்கப்படும்.ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர் இருந்தால், மற்றவர்கள் ஒப்புதல் கடிதம் அளித்து, ஒருவர் வங்கி கணக்கில் தொகையை பெற்று கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X