கோவை : சிங்காநல்லுாரில் கல்லுாரி பேராசிரியர் சவுந்திரராஜனின் வீடு கட்டும் பணியில், ஒடிசா மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பெயின்ட் அடிக்க திண்டுக்கல்லை சேர்ந்த தினேஷ்குமார், 21, உள்ளிட்டோர் சில நாட்களுக்கு முன் வந்தனர். திருஷ்டி கழித்த கோழியை தினேஷ்குமார் உள்ளிட்டோர் சமைத்து சாப்பிட்டனர். அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பசந்தா மாலிக், 47, என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தினேஷ்குமார், பசந்தா மாலிக்கை கத்தியால் குத்தினார். பசந்தா மாலிக் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.