கோவை : சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ்., அலைடு ெஹல்த் சயின்சஸ் கல்லுாரியில், மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கும் நிகழ்வு நடந்தது.
இந்நிகழ்ச்சியில், ராயல்கேர் மருத்துவமனையின், கதிரியக்க ஆலோசகர் டாக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கதிரியக்க துறையில் உள்ள செயற்கை நுண்ணறிவு திறன் பற்றி எடுத்துரைத்தார். இதில், எஸ்.என்.எஸ்.,தொழில்நுட்ப முதல்வர் செந்துார்பாண்டியன், அறுவை சிகிச்சை ஆலோசகர் ஜனார்த்தனன், அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லுாரி முதல்வர் சுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.