ரூ.3.45 கோடி 'ரிசர்வ் சைட்' மீட்பு; மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அதிரடி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ரூ.3.45 கோடி 'ரிசர்வ் சைட்' மீட்பு; மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அதிரடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
23:56

கோவை : கோவையில், ரூ.3.45 கோடி மதிப்புள்ள, 17 சென்ட் 'ரிசர்வ் சைட்'டை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.



கோவை மாநகராட்சி, 53வது வார்டு, பாலாஜி நகரில், 'ரிசர்வ் சைட்'டுகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை, குலசேகரன் என்பவர் ஆக்கிரமித்திருந்தது தொடர்பாக நடந்த வழக்கில், 2019ல் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. நகரமைப்பு பிரிவினர் நோட்டீஸ் வழங்கியும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் ஏஞ்சலினா தலைமையிலான குழுவினர் நேற்று அப்பகுதிக்குச் சென்றனர். 17 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தது. மாட்டுத்தொழுவம், நாய் வளர்ப்பு, கோழி கூடாரம், தென்னை மரம் வளர்த்திருந்தனர். ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டு, மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என, பெயர் பலகை வைத்தனர்.

இதன் அருகாமையில், 14 சென்ட் நிலமும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. அதில், ஆயில் ஸ்டோர் மற்றும் கார் ஷெட் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக, நகர ஊரமைப்புத்துறையிடம் விளக்கம் கோரப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, இடத்தை மீட்க அதிகாரிகள் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதுதவிர, 'ரிசர்வ் சைட்'டை ஆக்கிரமித்து, வணிக வளாகம் கட்டியிருப்பது தொடர்பான விவகாரத்திலும், நீதிமன்ற உத்தரவு பெற்று, மீட்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X