ஆர்.எஸ்.மங்கலம்,-ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி பொய்யாமொழி அம்மன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர், விநாயகர் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டு, மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், கோ பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.கோயில் பரிகார தெய்வங்களான பஞ்சமுக காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பர், நொண்டி சோனையா, முனீஸ்வரர் ஆகிய கோவில் கோபுரங்களிலும், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் நிர்வாகிகள் மோகனசுந்தரம், தயாளன், கோபால், சுந்தரமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.