ராமேஸ்வரம்-ராமேஸ்வரத்தில் கொசுக்கடியால் மக்களுக்கு டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவி அவதிப்படுகின் றனர்.ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபத்தில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு சமீபத்தில் பெய்த கன மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.ராமேஸ்வரம் பகுதியில் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.